விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் போலீசிடம் ஒப்படைப்பு//
ஈழப்போர் நடைபெற்ற சமயத்தில் விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2009-ல் ஈழப்போர் நடைபெற்ற இறுதிக்காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இலங்கை ராணுவத்தால் மீட்கப்பட்டது. இந்த நகைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கொழும்புவில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட நகைகள் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த நகைகள் அனைத்தையும் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
