Jelly Fish | Climate Change| பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்தின் வீரியத்தை காட்டிய ஜெல்லி மீன்கள்

Jelly Fish | Climate Change| பூமியில் நிகழும் காலநிலை மாற்றத்தின் வீரியத்தை காட்டிய ஜெல்லி மீன்கள்

#climatechange #jellyfish கோவளம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோவளம் கடற்கரையில் ஏராளமான ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிரபல சுற்றுலா தளமான கோவளத்தில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த மீன்களை பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் இருக்கிறது. இது பற்றி அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், இந்த வகை ஜல்லி மீன்களால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் காலநிலை மாற்றத்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதாகவும் தெரிவித்தனர். கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com