JD Vance 4th Child|அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்- துணை அதிபருக்கு பிறந்த குழந்தை
JD Vance 4th Child|அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்- துணை அதிபருக்கு பிறந்த குழந்தை
அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளுக்குப் பின் துணை அதிபருக்கு குழந்தை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாஷிங்டனில் பிறந்த இக்குழந்தைக்கு 'அலெக் நீல் வான்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக வான்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவான், விவேக், மிராபெல் என 3 குழந்தைகள் உள்ள நிலையில், 4-வது குழந்தையின் வரவைக் குடும்பமே உற்சாகமாகக் கொண்டாடி வருகிறது. 1870-க்குப் பிறகு, பதவியில் இருக்கும்போதே குழந்தைக்குப் பெற்றோரான அமெரிக்க துணை அதிபர் என்ற வரலாற்றுச் சிறப்பை வான்ஸ் பெற்றுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
