தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, 44 வயதான YUSAKU MAEZAWA தன்னை காதலிக்கும் பெண்ணுக்கு , நிலவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் , தங்கள் புகைப்படங்களை தனது மின்னஞ்சலுக்கு வருகிற 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். YUSAKU MAEZAWA இரண்டு காதலிகளை பிரிந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகளும் உண்டு. பல பெண்களும் MAEZAWAவின் மின்னஞ்சலுக்கு , தங்கள் புகைப்படங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. YUSAKU MAEZAWA 2023ஆம் ஆண்டு தனியார் விண்கலம் மூலம் நிலவுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.