Japan | Wild Fire | ஜப்பானில் பற்றி எரியும் காட்டுத்தீ - எதிர்பாரா முடிவெடுத்த அரசு
ஜப்பானில் வேகமாக பரவும் காட்டுத்தீ - 2,500 பேரை வெளியேற்ற உத்தரவு ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ வேகமாக பரவி, ஓட்சுச்சி (Otsuchi) நகரை நோக்கி பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2,500-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த தீ, பல இடங்களுக்கு பரவியதால் தீயணைப்புத் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவர திணறி வருகின்றனர். இருப்பினும் தரை மற்றும் வான்வழி மூலம் தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இதுவரை 1,100 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு, 8 கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
