Japan PM | PM Modi | ஜப்பானில் முதல் பெண் பிரதமர் தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து

x

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக லிபரல் ஜனநாயக கட்சித் தலைவர் சனே தகைச்சி தேர்வாகியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பலம் வாய்ந்த கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 465 உறுப்பினர்களில், 237 பேர் சனே தகைச்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பெரும்பான்மையை விட கூடுதலாக ஐந்து வாக்குகளை அவர் பெற்றதால், ஜப்பான் பிரதமராக தேர்வாகியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி பின்னடைவை சந்தித்ததால், ஜப்பான் அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது.

மேலும் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா தனது அமைச்சர்களுடன் கூண்டோடு ராஜினாமா செய்ததால்,

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் இரும்பு பெண்ணாக போற்றப்படும் சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் அந்நாட்டில் கடந்த 3 மாதமாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஜப்பான் பிரதமராக தேர்வான தகைச்சிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் தாம் ஆர்வமுடன் இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்