Israel Video Viral | ``முடிந்தது.. கொன்றுவிட்டோம்’’ ஆதாரமாக வீடியோவே வெளியிட்ட இஸ்ரேல்
``முடிந்தது.. கொன்றுவிட்டோம்’’ ஆதாரமாக வீடியோவே வெளியிட்ட இஸ்ரேல்
ஈரான் ட்ரோன் கமாண்டர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
ஈரானின் ஆளில்லா குட்டி விமானங்களை கையாளும் கமாண்டர் அமீன் ஜுட்கி, இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் ராணுவத்திற்கிடையே போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஈரானின் ட்ரோன் தாக்குதல் இஸ்ரேலை சற்று நிலைகுலைய வைத்தது. இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கி, ஈரானின் முக்கிய ஆயுத தளவாடங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் ஆளில்லா குட்டி விமானங்களை வழிநடத்தும் கமாண்டர் அமீன் ஜுட்கியை ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
