பஹ்ரைன் சார்பாக 40 டன் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்

பஹ்ரைன் அரசு சார்பாக இந்தியாவிற்கு 40 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பஹ்ரைன் சார்பாக 40 டன் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்
Published on

பஹ்ரைன் சார்பாக 40 டன் திரவ ஆக்சிஜன் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்

பஹ்ரைன் அரசு சார்பாக இந்தியாவிற்கு 40 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கையும் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் பரவலாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவி வருகின்றன. அந்த வகையில், பஹ்ரைன் சார்பாக முதற்கட்டமாக 40 டன் திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவ உதவிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் பஹ்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com