இஸ்ரேல்-காஸா போர்நிறுத்தம்.. 3 கைதிகளை விடுவித்த ஹமாஸ் - போர்க்களத்தில் பரவும் அமைதி

x

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த‌தை அடுத்து, அறிவித்தபடி மூன்று பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.

24 வயதான ரோமி கோனென், 28 வயதான எமிலி டாமரி, 31 வயதான தோரன் ஸ்டெயின்பிரேச்சர் ஆகியோரை, பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். ஏராளமான ஹமாஸ் அமைப்பினர் சூழ்ந்திருக்க அனுப்பி வைக்கப்பட்டபோது, காசா மக்கள் ஆரவாரம் செய்தனர். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் 3 பேரையும் பரிசோதித்த செஞ்சிலுவை சங்கத்தினர், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மற்றவர்களும் பாதுகாப்பாக மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்பக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை வீடியோ மூலம் பார்த்த உறவினர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்