காசா முனையில் அமைதி திரும்பியது : 11 நாட்கள் தொடர்ந்த ராக்கெட் தாக்குதல்கள் - எகிப்து அரசு மூலம் நடந்த பேச்சு வார்த்தை

பெரும் சேதத்தையும், உயிரிழப்புகளையும் விளைவித்த இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
காசா முனையில் அமைதி திரும்பியது : 11 நாட்கள் தொடர்ந்த ராக்கெட் தாக்குதல்கள் - எகிப்து அரசு மூலம் நடந்த பேச்சு வார்த்தை
Published on

இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலத்தின் கிழக்கு பகுதி தொடர்பாக பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக முரண்பாடுகளும், மோதல்களும் தொடர்கின்றன. கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜாரா பகுதியில் பெருவாரியாக பாலஸ்தீனிய அரேபியர்கள் வசிக்கின்றனர். இவர்களை படிப்படியாக வெளியேற்ற இஸ்ரேல் அரசு முயல்வதால், மே முதல் வாரத்தில் அங்கு இரு தரப்பினரிடையே மோதல்கள் வெடித்தன. அதன் தொடர்சியாக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஹமாஸ் அமைப்பின் கீழ் உள்ள காசா முனை மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

மே 10ஆம் தேதி தொடங்கிய ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக இஸ்ரேலில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களினால் பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் உள்ளிட்ட 232 பேர் கொல்லப்பட்டனர். 50,000க்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.

இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்தி, சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த அமெரிக்கா, ஐ.நா சபை, பிரான்ஸ், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தன. எகிப்து அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக இரவு தரப்பினரிடையே சமாதான உடன்படிக்கை உருவாகி போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எகிப்து அரசின் முயற்சியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார். இஸ்ரேல், ஹமாஸ் இரு தரப்பினரும் தங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளதாக கூறி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com