போர் முடிந்தது என உலகமே நினைத்த நேரத்தில் குண்டுமழை.. கொன்று குவிப்பு.. இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல்

x

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 குழந்தைகள், 31 பெண்கள் உள்பட 115 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகை அதிரச் செய்துள்ளது. ஹமாஸ் படையினரைக் குறி வைத்து 50 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்தது. ஆனால் ஐநாவின் மனித உரிமை ஆணையம் இஸ்ரேலின் கண்மூடித் தனமான தாக்குதலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்