Israel War | இஸ்ரேலை குலைநடுங்க விட்ட ஏமன்
இஸ்ரேலில் திடீரென ஒலித்த சைரன் - பொதுமக்கள் பீதி
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் திடீரென சைரன் சப்தம் ஒலித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். ஹமாஸுக்கு ஆதரவாக, இஸ்ரேலை எதிர்த்து போரில் ஈடுபட்டு வரும் ஹவூதி அமைப்பினர், ஏமனில் இருந்து ஏவிய ஏவுகணைகள் சைரன் சப்தத்தை எழுப்பியவாறு ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள டெல் அவிவ் நகரை நோக்கி வந்தன. நள்ளிரவு நேரத்தில் ஏவுகணையும் டிரோன்களும் ஏவப்பட்டதால் டெல் அவிவ் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலையில், இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Next Story
