Israel vs Palestine | சத்தமின்றி இஸ்ரேலியர்கள் செய்யும் காரியம் - அணு அணுவாக கரையும் பாலஸ்தீனம்

x

இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களால் தொடர் வன்முறை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் தொடர் தாக்குதல்களால், பாலஸ்தீனியர்கள் வெளியேறி வருகின்றனர்... Ein al-Auja பகுதியில் வாழும் பழங்குடியின பாலஸ்தீன மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ஜோர்டான் ஆற்றிற்கு அருகிலுள்ள இந்தப் பகுதியில், சமீப காலங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் மனித உரிமை அமைப்பு இந்தப் பகுதியில் பல தாக்குதல் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளது...

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் ராணுவம், ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே தங்களின் பொறுப்பு எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்