காசாவை சவக்குழியாக்கும் இஸ்ரேல்.. பலி எண்ணிக்கை 58,479ஆக அதிகரிப்பு
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இருந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. பல இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
இந்நிலையில், ஹமாஸ்-இஸ்ரேல் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் தொடர்வதாகவும், அவை முடிவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் பின் முகமது அல் அன்சாரி Majed bin Mohammed Al Ansari தெரிவித்தார்.
இதனிடையே, காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 479-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
