Israel | Palestine | "பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது.." நெதன்யாஹு பேச்சால் அதிர்ச்சி
பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நிகழ்த்திய படுகொலையை சுட்டிக்காட்டியுள்ள நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு இந்த நாடுகள் மகத்தான பரிசை வழங்குவதாக குற்றம் சாட்டினார். ஜோர்டான் நதிக்கு மேலே பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Next Story
