காசா முனை மீதான தாக்குதலில் சிறப்பான வெற்றி - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனம் இடையிலான 11 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த சண்டையில் தாங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா முனை மீதான தாக்குதலில் சிறப்பான வெற்றி - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து
Published on

கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர். 11 நாட்களாக நடைபெற்ற சண்டை நேற்று முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த சண்டையில் தாங்கள் வெற்றிபெற்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், காசா முனை மீதான தாக்குதல் சிறப்பான வெற்றி என்றும். இந்த மோதலில் இலக்கை அடைந்துவிட்டோம். என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com