Israel Iron War | G7 Summit | "ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது" ஒன்று கூடிய ஜி7 தலைவர்கள்
ஈரான் கைகளில் அணுகுண்டு போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜி7 மாநாட்டுத் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கனடாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய கிழக்கில் அமைதி நிலவ உறுதி பூண்டுள்ளதாகவும்,
போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஜி7 மாநாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில், மத்திய கிழக்கில் பதற்றம் தணியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
