Israel Gaza War | 65,000 பேர் உயிரை குடித்தும் தீராத இஸ்ரேலின் ரத்த தாகம்.. காசாவை சூழ்ந்த நரக இருள்
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேலின் தென் பகுதியில் காசா முனையைக் குறிவைத்து, ஏறத்தாழ அரை மணிநேரத்தில் மூன்று முறை இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால், அந்த பிராந்தியம் முழுவதையும் கரும்புகை சூழ்ந்தது.
இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதலால் பீதியடைந்த பாலஸ்தீன மக்கள், தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி நாட்டின் தென்பகுதியில் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர்.
Next Story
