கண்மூடித்தனமாக தாக்கிய இஸ்ரேல் - சிதறி கிடந்த உடல்கள்.. பதறவைக்கும் காட்சிகள்

x

காசாவின் ராஃபா நகரில், இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலஸ்தீனியர்கள் 31 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வரும் உதவி மையத்தில் நிவாரண உதவி பெறுவதற்கு ஆயிரக் கணக்கானோர் வந்திருந்தபோது, இஸ்ரேலியப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 31 பேர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே, பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்றும், பயங்கரவாதிகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்