பள்ளி கட்டடத்தில் இஸ்ரேல் தாக்குதல் - 10 பேர் பலி

பள்ளி கட்டடத்தில் இஸ்ரேல் தாக்குதல் - 10 பேர் பலி
Published on
• காசாவில் பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். • மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. போரால் காசா பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காசா மக்களின் குடியிருப்புகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காசாவில் பள்ளிக் கட்டடம் ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த மக்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினர் பள்ளிக் கட்டடத்தில் இயங்கியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ஹமாஸ் இதனை மறுத்துள்ளது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களைப் பார்த்து, பெண் ஒருவர் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கலங்கடிக்கும் வகையில் உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com