இஸ்ரேல் தாக்குதல் - குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
காசாவில் மருத்துவ முகாம் அருகே இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர். காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் மருத்துவ முகாம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காயம் அடைந்ததாக, காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தை ஏந்தி பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கலங்கடிக்கும் வகையில் இருந்தது.
Next Story
