சாதித்த `குட்டி' நாடு..முடியும் போர்..ஒரு அக்ரீமென்டில் உலக அமைதி..போர் நிறுத்தம் எப்படி நடக்கும்..?
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 19 ஆம் தேதி அமலுக்கு வரும் என சொல்லப்படுகிறது. முதல்கட்ட போர் நிறுத்த செயல்முறையை 6 வாரங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அந்தவகையில் முதல் 6 வாரங்களில் ஹமாஸ் அமைப்பு, தங்களிடம் உள்ள இஸ்ரேல், அமெரிக்க பிணைக் கைதிகள் 33 பேரை விடுவிக்க வேண்டும். அதற்கு பதிலாக இஸ்ரேல், ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும். காசா எல்லையில் இருந்து குறைந்தது 700 மீட்டர் தொலைவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்க வேண்டும். 50 ஆவது நாளில் பிலடெல்பி காரிடார் அதாவது காசா-எகிப்து எல்லையிலிருந்து படைகளை இஸ்ரேல் முழுமையாக திரும்ப பெற வேண்டும். இந்த நகர்வுகளை எல்லாம் கத்தார், எகிப்து அதிகாரிகள் பார்வையிடுவார்கள். உதவிப் பொருட்களுடன் தினசரி 600 டிரக்குகளை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும். எகிப்து எல்லையில் உள்ள ரஃபா எல்லையை 7 நாட்களில் திறக்க வேண்டும். வடக்கு காசாவுக்கு மக்கள் திரும்ப அனுமதிக்க வேண்டும். காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற அனுமதிக்க வேண்டும். 2 ஆவது கட்டத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உள்பட மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் காசாவில் இருந்து முழுமையாக படைகளை திரும்ப பெற வேண்டும். போர் நிறுத்தத்தின் 3 ஆவது கட்டம் 3 முதல் 5 வருடகால சர்வதேச புனரமைப்பு திட்டத்திற்காக சிறைபிடிக்கப்பட்டவர்கள் உடல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.இருப்பினும் போர் நிறுத்தத்திற்கு பிறகு காசாவை யார் ஆட்சி செய்வது என்பதில் தெளிவு இல்லை. மேற்கு கரையில் ஆட்சி செய்யும் பாலஸ்தீன தேசிய ஆணையம் தலைமையில் இடைக்கால அரசு நிர்வாகம் அமைய வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. குறிப்பிட்ட போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேலில் எதிர்ப்பும் நிலவுகிறது
