உலகில் இப்படி ஒரு திருவிழாவா! நகரமே `பிங்க்’ சிட்டியாக மாறிடுச்சு
உலகில் இப்படி ஒரு திருவிழாவா! - நகரமே `பிங்க்’ சிட்டியாக மாறிடுச்சு
லிதுவேனியா நாட்டுல பாரம்பரியமான பீட்ரூட் குளிர் சூப் (cold beetroot 'kefir' ) திருவிழா ரொம்பவே உற்சாக கொண்டாட்டப்பட்டுச்சு...
இது பந்தயமில்லீங்க...பாரம்பரிய கோடை உணவு திருவிழா கொண்டாட்டம்.... லிதுவேனியா (LITHUANIA) நாட்டோட தலைநகர் வில்னியஸில தான் (VILNIUS) இந்த திருவிழா நடந்துச்சு...
பாரம்பரிய பீட்ரூட் கேஃபிர் குளிர் சூப் (cold beetroot 'kefir' ) திருவிழாவால் வில்னியஸ் (VILNIUS) நகரமே பிங்க் சிட்டியாக காட்சி அளிச்சிச்சு...
'சால்டிபார்ஸ்கிஐ' (Saltibarsciai) என்றழைக்கப்படுற தனித்துவமான இந்த சூப், துருவிய பீட்ரூட், வெள்ளரிக்காய், வெங்காயத்தால் தயார் செய்யப்படுது...
கொண்டாட்டத்துல பங்கேற்றவங்கள், பிங்க் சூப்ப சாப்பிட்டுட்டு, போட்டோவுக்கு ஹேப்பியா போஸ் கொடுத்தாங்க.. அவர்களை உற்சாகப்படுத்துற வகையில எக்கச்சக்கமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டுச்சு...
கோடைக்காலத்துல புத்துணர்ச்சி கிடைக்குற வகையில கொண்டாட்டப்பட்ட பிங்க் சூப் திருவிழா, பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களை ரொம்பவே பரவசப்படுத்துச்சுன்னு தான் சொல்லனும்....
