Iran US War| உலக நாடுகளை மாறி மாறி பந்தாடும் USA, ஈரான்.. எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உலகம்

Iran US War| உலக நாடுகளை மாறி மாறி பந்தாடும் USA, ஈரான்.. எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படவில்லை என மறுக்கும் அமெரிக்கா ​ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், அது இன்னும் திறந்தே இருப்பதாகவும், அங்கு கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யத் தங்கள் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. ​இரு நாடுகளுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தங்களின் அனுமதி இல்லாத பாதையில் சென்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறும் நிலையில், உலக எரிசக்தி தேவையில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டு செல்லும் இந்த முக்கிய ஜலசந்தியில் அமெரிக்காவின் தலையீடு முடியும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com