IranIsraelWar | Iran | America | காமேனியை கொன்றுவிட்டோம் என சூளுரைத்த அமெரிக்கா, இஸ்ரேல்

காமேனியை கொன்றுவிட்டோம் என சூளுரைத்த அமெரிக்கா, இஸ்ரேல்

காமேனியை கொன்றுவிட்டோம் என சூளுரைத்த அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் கொடுத்த திடீர் அதிர்ச்சி “ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்“ ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக ஐநா தலையிட வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் எழுதிய கடிதத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் மீது மேற்கொண்டுள்ள சட்டவிரோதமான மற்றும் பலவந்தமான தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கி, தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51ன் கீழ் தற்காப்பு உரிமையை ஈரான் பயன்படுத்தும் என்றும், எதிரி நாடுகளின் பிராந்திய தளங்கள் அனைத்தும் சட்டப்பூர்வ ராணுவ இலக்குகளாக கருதப்படும் என்றும் எச்சரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com