Iran War | சவுதி, அமீரகம் நோக்கி பறக்கும் ஆயுதங்கள்? - கொரியாவில் என்ன நடக்கிறது?

Iran War | சவுதி, அமீரகம் நோக்கி பறக்கும் ஆயுதங்கள்? - கொரியாவில் என்ன நடக்கிறது?

தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதங்களை வேறு பகுதிகளுக்கு மாற்றுவதை தடுக்க தங்களால் முடியாது என்று தென் கொரியா அதிபர் லி ஜே ம்யூங் தெரிவித்துள்ளார். தற்போது தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க படையினர் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய ராணுவ வசதிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒசான் விமான தளத்தில் இருந்த சில ஏவுகணை அமைப்புகள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி மாற்றப்பட்டிருக்கலாம் என தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பேசிய லி ஜே ம்யூங், அமெரிக்க ஆயுதங்களை வேறு பகுதிகளுக்கு மாற்றுவதை தடுக்க தங்களால் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com