Iran War Update | அரபு நாடுகளை கதிகலங்க விட்ட ஈரான் - வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்

அரபு நாடுகளை கதிகலங்க விட்ட ஈரான் - வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்

தீவுகளை கைப்பற்ற முயன்றால் தாக்குதல் தீவிரமாகும் என அண்டை நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை பாரசீக வளைகுடாவில் உள்ள தீவுகளைக் கைப்பற்ற ஏதேனும் அண்டை நாடு திட்டமிட்டால், அந்த நாட்டின் முக்கியக் கட்டமைப்புகள் மீது இடைவிடாதத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அபு மூசா (Abu Musa), கிரேட்டர் துன்ப் (Greater Tunb) மற்றும் லெஸ்ஸர் துன்ப் (Lesser Tunb) ஆகிய தீவுகளைக் கைப்பற்ற 'எதிரிகள்' சதி செய்வதாகத் தங்களுக்கு உளவுத் தகவல் கிடைத்துள்ளதாக ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா (Ras Al-Khaimah) பகுதியை ஈரான் ராணுவம் தனது இலக்காகக் குறிப்பிட்டுள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com