Iran War | Trump | தோலுரித்து காட்டிய ஈரான்.. அதிர்ச்சியில் டிரம்ப்

தோலுரித்து காட்டிய ஈரான்.. அதிர்ச்சியில் டிரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் சொன்னதற்கு ஈரான் மறுப்பு ஈரானுடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறியதுடன், டிரம்பின் இந்த அறிவிப்பு போலியானது என்றும், சர்வதேச சந்தைகளைக் கட்டுப்படுத்த அவர் இது போன்று திட்டமிட்டு கூறுவதாகவும் விமர்சித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com