

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால், ஈரான், ஈராக், ஓமன், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்கள், ஈராக் செல்வதை தவிர்க்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்திய தூதரம் தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ள வெளியுறவுத்துறை, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது.