Iran US War | ``அமெரிக்க கடற்படை கண்ட்ரோலில் ஈரான்’’

``அமெரிக்க கடற்படை கண்ட்ரோலில் ஈரான்’’

அமெரிக்காவின் பிடியால் ஹார்முஸ் ஜலசந்தியில் நீடிக்கும் பதற்றம் ஈரான் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பாக உடன்படிக்கைக்கு வரும் வரை, அந்நாட்டை அமெரிக்கக் கடற்படை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் ஈரான் பெரும் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஏப்ரல் 8-ம் தேதி நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த நடவடிக்கை தொடர்கிறது. இதனிடையே, இதற்கு பதிலடியாக அமெரிக்கா தனது சட்டவிரோத முற்றுகையை தொடர்ந்தால் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எதிர்கொள்ளும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com