Iran || “ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா“ - பேச்சுவார்த்தையில் தடை

“ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா“ - பேச்சுவார்த்தையில் தடை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' தாக்குதல் ஈரானின் அணுசக்தி மையங்களை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இதுவே ராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com