Iran | Trump | ஈரான் நோக்கி விரையும் US போர்க்கப்பல்கள் -டிரம்ப் சொன்ன வார்த்தை.. குலுங்கும் ஆசியா

x

அமெரிக்கா, ஈரானை நோக்கி மாபெரும் கடற்படையை அனுப்பி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதை தெரிவித்தார்...

தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக பல கப்பல்கள் ஈரானை நோக்கி செல்வதாகவும்...ஒருவேளை அவை பயன்படுத்தப்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்...

USS Abraham Lincoln உட்பட 3 போர்க் கப்பல்கள் மத்திய கிழக்கை நோக்கி நகர்ந்து செல்வதாக, கப்பல் கண்காணிப்பு தரவுகளில் கூறப்படுகிறது.

மேலும் USS George H.W. Bush ஐரோப்பாவை நோக்கி பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.

போர் வேண்டாம் என்றாலும், ஈரானை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஈரானின் புரட்சிக் காவல் படை தளபதி, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், முழுமையான போருக்கு தயார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்