Iran Israel War | ``திரும்ப திரும்ப முளைச்சி வருவோம்’’ - US, இஸ்ரேலுக்கு தலைவலி கொடுக்கும் ஈரான்

``திரும்ப திரும்ப முளைச்சி வருவோம்’’ - US, இஸ்ரேலுக்கு தலைவலி கொடுக்கும் ஈரான்

ஈரானின் பாதுகாப்புக் குழுவின் தலைவராக முன்னாள் தளபதி நியமனம் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராக முன்னாள் புரட்சிகர பாதுகாப்பு படை தளபதியான முகமது பாகர் ஜோல்காத்ர் (Mohammad Bagher Zolghadr) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவரான அலி லாரிஜானிக்குப் பதிலாக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் இதற்கு முன்னர் ஈரானின் உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்புத் துணை அதிகாரி, ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் பிரிவில் துணை அதிகாரி மற்றும் குற்றத் தடுப்புக்கான நீதித்துறைத் தலைவரின் ஆலோசகர் போன்ற உயர் பாதுகாப்புப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com