Iran Israel War | Trump | ``கசப்பான தோல்வி.. உலகத்திடம் மறைக்க முயற்சிக்கும் டிரம்ப்'' - ஈரான்
``கசப்பான தோல்வி.. உலகத்திடம் மறைக்க முயற்சிக்கும் டிரம்ப்'' - ஈரான்
டிரம்ப் தோல்வியை மறைக்க முயற்சிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமான சம்பவத்தைத் தொடர்ந்து, விமானியை மீட்டதை அமெரிக்கா பெரும் வெற்றி என கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், கசப்பான தோல்வியை மறைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஈரான் தரப்பில் பேசிய இப்ராகிம் ஸோல்ஃபகாரி, இந்த மீட்பு நடவடிக்கையின் போது அமெரிக்காவின் சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அது தங்களின் வெற்றி என்றும் தெரிவித்தார்.
