Iran Israel War | அதிகாரப் பூர்வமாக உறுதி செய்தது ஈரான்

அதிகாரப் பூர்வமாக உறுதி செய்தது ஈரான்

ஈரான் உளவுத்துறை தலைவர் கொலை ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுப்பிரிவு தலைவர் மஜித் காதேமி, அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஈரானின் மெஹ்ராபாத் (Mehrabad) விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட 45 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருகிறது. இருப்பினும், தற்காலிக அமைதிக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதேவேளையில், இந்தியாவை நட்பு நாடாகக் கருதுவதால், இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com