Iran Israel War | அமெரிக்கா, இஸ்ரேலின் பெரும் தலைகளை குலைநடுங்க விட்ட ஈரான்
அமெரிக்கா, இஸ்ரேலின் பெரும்தலைகளை குலைநடுங்க விட்ட ஈரான்
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் குறிவைக்கப்படுவார்கள் என ஈரானின் ஆயுதப்படைகள் செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபஸ்ல் ஷெகார்சி எச்சரித்துள்ளார்... அவர்களுக்கான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களும் இனி பாதுகாப்பானவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள இந்த போர் முடிவில்லாமல் நீடிக்கிறது. உலக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால், எரிசக்தி விலை உயர்ந்து, உலகளாவிய பொருளாதாரத்தில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
