Iran Israel War | ``மீண்டுமொரு இன அழிப்பை..’’ - யூத சமாதியில் நின்று இஸ்ரேல் அறிவிப்பு

``மீண்டுமொரு இன அழிப்பை..’’ - யூத சமாதியில் நின்று இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களின் நினைவாக, இஸ்ரேலில் ஹோலோகாஸ்ட் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெருசலேமில் உள்ள யாட் வஷெம் (Yad Vashem) நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் நிகழ்வின் போது பேசிய பிரதமர் நெதன்யாகு, ஈரானை அணு ஆயுத நாடாக மாறவோ, மற்றொரு இன அழிப்பு நிகழவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என உறுதிபடத் தெரிவித்தார். அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த ஆவேசமான பேச்சு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com