கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியுள்ள நிலையில், வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்துள்ளார். மேலும், பாதிப்பு குறைவான 132 இடங்களில் மசூதிகள் திங்கட்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.