America | Iran | Trump | அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டு.. ஈரான் சொன்ன திடுக்கிடும் பதில்கள்
அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைக்க ஈரான் திட்டமிடுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா பதற்றத்தை அதிகரிக்க முயற்சிப்பதாக சாடியுள்ளது. அத்துடன் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், ராணுவ திறன்களை மேம்படுத்துவதிலும் ஈரான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்விதமான ஆக்கிரமிப்பு செயலுக்கும் ஈரான் உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
