ஐபோன் விலை ரூ. 3 லட்சமாக உயரும்? - அமெரிக்கா - சீனாவின் வர்த்தகப்போர்..

x

அமெரிக்காவில் ஐபோன் உற்பத்தி தொடங்கினால் விலை 3 மடங்கு உயர்ந்து, இந்திய மதிப்பில் 3 லட்சம் ரூபாய் வரை விலை உயரக்கூடும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப்போர், ஐபோன்களையும் விட்டுவைக்காது என்றே தெரிகிறது. 90 சதவீத ஃபோன்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்கனவே சரிவை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கப்படும் பட்சத்தில், பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை அமெரிக்காவில் ஐபோன் உற்பத்தி தொடங்கும் பட்சத்தில் தற்போதைய விலையில் 3 மடங்கு உயர்ந்து, 3 லட்சம் ரூபாய் வரை விலை உயரக்கூடும் என அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்