சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சரக்கு விண்கலம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சரக்கு விண்கலம்
Published on

விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை சுமந்து சென்ற ராஸ்காஸ்மோஸ் சரக்கு விண்கலம் திட்டமிட்டபடி சென்றடைந்தது. கடந்த 14 ந்தேதி

ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ராஸ்காஸ்மோஸ் சரக்கு விண்கலத்தில் 3 டன் எடை கொண்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணில் சுற்றும் ராஸ்காஸ்மோஸ் சரக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து குப்பை கழிவுகளை ஏற்றி கொண்டு 6 மாதத்திற்கு பின் பூமிக்கு திரும்பும் என்று அமெரிக்காவின்

நாசா தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com