

இந்திய-சீன இடையேயான மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில், இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்திய வீரர்களுக்கு 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களை என்றும் நினைவில் கொள்வோம் என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.