மொரீஷியஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியாவின் அறிவிப்பு
மொரீஷியஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியாவின் அறிவிப்பு
மொரீஷியசுக்கு நூறு மின்சார பேருந்துகள் இந்தியா சார்பில் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தியா வந்துள்ள மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமை பிரதமர் மோடி வாரணாசியில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, மொரீஷியஸில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார். கடந்த ஆண்டு மொரீஷியஸில் யுபிஐ பண பரிவர்த்தனை தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அந்நாட்டுக்கு 100 மின்சார பேருந்துகளை இந்தியா வழங்கும் என்றும், அதில் 10 ஏற்கனவே மொரீஷியஸை சென்றடைந்ததாகவும் குறிப்பிட்டார்.இதேபோல மொரீஷியஸில் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகம் நிறுவப்படும் என்று பிரதமர் கூறினார். மொரீஷியஸின் கடலோர காவல்படை கப்பல் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், அந்நாட்டைச் சேர்ந்த120 அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்று வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
