கடைசி வரை ரஷ்யாவை விட்டு கொடுக்காத இந்தியா -இனி கொடுக்க போகும் விலை ஏராளம்

x

இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவின் 50% வரி அமல்

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதில், 25 சதவீதம் ஏற்கெனவே அமலுக்கு வந்த நிலையில், மேலும் 25 சதவீதம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினம் மற்றும் நகைகளின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் மருந்து மற்றும் மின்சாதன பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்