India | US | Iran War | வாஷிங்டனில் நடந்த சந்திப்பில் ஈரான் விவகாரம் குறித்து பேச்சு?
வாஷிங்டனில் நடந்த சந்திப்பில் ஈரான் விவகாரம் குறித்து பேச்சு?
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை, வாஷிங்டனில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத் தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது, தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
