India US Deal| இந்தியா, US போடும் பிரமாண்ட டீல் - உறுத்தும் உலக நாடுகளின் கண்
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்திய குழு அமெரிக்கா பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே எட்டப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் இம்மாத இறுதியில் வாஷிங்டன் செல்ல உள்ளனர். பாதுகாப்புத் துறை மட்டுமின்றி, வர்த்தகத் துறையிலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தூதர் கிரீர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கே இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வர்த்தக முன்னுரிமைகளைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் எடுத்துவரும் இந்த முன்னெடுப்புகள், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
