India US Deal |``மீண்டும்நடந்தால்..’’ - இந்தியாவுக்கு `கண்டிஷன்’ போட்ட அமெரிக்கா

``மீண்டும்நடந்தால்..’’

ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, இந்தியா மீது விதித்த 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா திரும்பப்பெற்றது. இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்ட நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் அபராத வரியை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக, இந்தியா மீது விதித்த 25 சதவீத கூடுதல் அபராத வரியை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கினால், கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் எண்ணெய் இறக்குமதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளதாகவும், அமெரிக்க எரிசக்தி தயாரிப்புகளை வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com