Trump vs Modi | டிரம்ப் முடிவால் இந்தியா பேரதிர்ச்சி - ``எங்க மேல இவ்ளோ வன்மமா?’’

x

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வரும் நிலையில், ஹங்கேரிக்கு மட்டும் டிரம்ப் விலக்கு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்க ஹங்கேரிக்கு டிரம்ப் அனுமதி அளித்தார். ஹங்கேரியின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முடிவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியாவுக்கு அதிக வரி விதித்த டிரம்ப், ஹங்கேரிக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது ட்ரம்ப் பாரபட்சம் காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்