India | Russia | "உள்ளே வந்தால் பஸ்பம் தான்.." இந்தியாவுக்கு ரஷ்யா தரும் அடுத்த Gift

x

இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ரஷ்யாவின் வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான எஸ்-400 குறித்து போடப்பட்ட ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஐந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வாங்க 40 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் போட்டிருந்தது. இதில் இதுவரை நான்கு எஸ்-400கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒன்றும் அடுத்த ஆண்டு ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சித்தூரின் போது, எஸ்-400கள் இந்திய ராணுவத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்