எல்லையில் அத்துமீறும் சீனா...

சீன ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லையில் அத்துமீறும் சீனா...
Published on

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவாஸ்தவா, எல்லையில் பிரச்சனையை தீர்க்க கடந்த மூன்று மாதங்களாக இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சீன ராணுவம் கடந்த மாதம் 29 ஆம் தேதி நள்ளிரவு30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பாங்காங் ஏரியின் தென் கரையில் சூழ்ச்சிகளில் ஈடுபட்டதாக கூறினார். இந்த ஊடுருவலை இந்திய ராணுவம் தக்க சமயத்தில் தடுத்ததாக ஸ்ரீவாஸ்தவா, தெரிவித்தார். இருநாட்டிற்கு இடையில் எட்டப்பட்ட புரிதல்களை சீனா முற்றிலும் புறக்கணிப்பதாக கூறியுள்ள அவர், எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com